“திக் திக் நிமிடங்கள்..” தண்டவாளத்தில் விழுந்த பச்சிளம் குழந்தை… தந்தை எடுத்த அதிரடி முடிவு.. நெட்டிசன்களைக் கதற வைத்த வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திக் திக் நிமிடங்கள்..” தண்டவாளத்தில் விழுந்த பச்சிளம் குழந்தை… தந்தை எடுத்த அதிரடி முடிவு.. நெட்டிசன்களைக் கதற வைத்த வீடியோ..!!

Published

on

பங்களாதேஷில் ஓடும் ரயிலுக்கு முன்பாக தண்டவாளத்தில் விழுந்த தனது பச்சிளம் மகனைக் காப்பாற்ற, தந்தை ஒருவர் நொடிப் பொழுதில் தண்டவாளத்தில் குதித்துத் தனது உடலால் மகனை மூடிப் பாதுகாத்த நெஞ்சை உலுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.பைரப் ரயில் நிலையத்தில் ஒரு குடும்பத்தினர் ரயிலில் இருந்து அவசரமாக இறங்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக ஒரு வயதுக் குழந்தை தந்தையின் கைகளில் இருந்து நழுவி தண்டவாளத்தின் குறுகிய இடைவெளியில் விழுந்துள்ளது. அதே நேரத்தில் ரயில் நகரத் தொடங்கியதால், எவ்வித யோசனையுமின்றி அந்தப் பாசக்காரத் தந்தை உடனடியாகக் கீழே குதித்துள்ளார்.

ரயில் தன் தலைக்கு மேல் வேகமாகச் சென்று கொண்டிருந்த அந்த மரண பயமுறுத்தும் நொடிகளில், அவர் தனது மகனைத் மார்போடு இறுக்கி அணைத்துக் கொண்டு, தண்டவாளத்தில் குப்புறப் படுத்துக் கொண்டுள்ளார். தன் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று தெரிந்தும், சுயநலமின்றித் தனது பிள்ளையைக் காப்பதே முக்கியம் எனத் துணிந்த அந்தத் தந்தையின் அசாத்திய தைரியத்தால், இரு உயிர்களும் எவ்வித காயமுமின்றிப் பத்திரமாக மீட்கப்பட்டன. நிஜ வாழ்க்கையின் சூப்பர் ஹீரோவாக மாறிய இந்தத் தந்தையின் பாசப் போராட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி ஒட்டுமொத்த உலகையே நெகிழச் செய்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in