“அடப்பாவமே.. இதற்கெல்லாம் கூட கைதா..?” விமான நிலையத்தில் வைத்து தாயை வளைத்த அமெரிக்க போலீஸ்.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடப்பாவமே.. இதற்கெல்லாம் கூட கைதா..?” விமான நிலையத்தில் வைத்து தாயை வளைத்த அமெரிக்க போலீஸ்.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஐரீன் மில்லர் என்ற பெண், தனது நான்கு குழந்தைகளையும் வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலை விஷயமாக லாஸ் வேகாஸ் சென்றதற்காகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஐரீன் வீட்டில் இல்லாத சமயத்தில், அவரது 9, 11, 12 மற்றும் 14 வயதுடைய நான்கு குழந்தைகள் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். அப்போது துரதிர்ஷ்டவசமாக 9 வயது சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த மற்றொரு குழந்தை உடனடியாக அவசர உதவி எண்ணைத் தொடர்புகொண்டு உதவி கேட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு, குழந்தைகள் தனியாக விடப்பட்ட விபரத்தை போலீசாருக்குத் தெரியப்படுத்தினர்.

இதற்கிடையில், லாஸ் வேகாஸில் தனது பணியை முடித்துவிட்டு ஃபுளோரிடா திரும்பிய தாய் ஐரீன் மில்லரை, அவர் விமான நிலையத்தில் இறங்கிய உடனேயே காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, தான் குழந்தைகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்வதற்காக ‘பேபி சிட்டர்’ ஒருவரை முறைப்படி ஏற்பாடு செய்திருந்ததாகக் கூறினார். ஆனால், அந்த நபர் இரவில் குழந்தைகளைத் தனியாகத் தவிக்க விட்டுவிட்டு வெளியில் சென்றுவிட்டதே இந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் என்று ஐரீன் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளார். எனினும், குழந்தைகளைப் பாதுகாப்பற்ற சூழலில் தவிக்கவிட்ட குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in