செம ட்விஸ்ட்.. வயலில் தனியாக இருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு.. அலறல் சத்தம் கேட்டு விவசாயிகள் செய்த பகீர் காரியம்… வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

செம ட்விஸ்ட்.. வயலில் தனியாக இருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு.. அலறல் சத்தம் கேட்டு விவசாயிகள் செய்த பகீர் காரியம்… வைரல் வீடியோ..!!

Published

on

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில், வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற இரு திருடர்களை அங்கிருந்த விவசாயிகள் கைக் கள்ளனுமாகப் பிடித்து, அவர்கள் பறிக்க முயன்ற சங்கிலியாலேயே அவர்களைக் கட்டி வைத்துத் தர்மஅடி கொடுத்த சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜின்னாரம் மண்டலத்திற்குட்பட்ட சோலக்பள்ளி கிராமத்தில், கிஷ்தம்மா என்ற பெண்மணி தனது விவசாய வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரு நபர்கள் திடீரென அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த கிஷ்தம்மா சத்தமிட்டுக் கூச்சலிடவே, அருகில் உள்ள வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த சக விவசாயிகள் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அந்த இரு திருடர்களையும் தப்பியோட விடாமல் மடக்கிப் பிடித்தனர்.

விவசாயிகளிடம் சிக்கிய அந்த இரு திருடர்களையும், அவர்கள் திருட முயன்ற அதே சங்கிலியைப் பயன்படுத்திக் கட்டிப் போட்டுப் பொதுமக்கள் நன்றாக வெளுத்து வாங்கிய பின்னர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஜின்னாரம் காவல் ஆய்வாளர் நாகார்ஜுன ரெட்டி நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் ஹத்னூர் மண்டலம் முச்சார்லா பகுதியைச் சேர்ந்த வத்தே சைலு மற்றும் மீனம்பள்ளியைச் சேர்ந்த அரவிந்த் என்பது அடையாளம் காணப்பட்டது. இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது இருவரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு (Remand) அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in