LATEST NEWS
“இன்னைக்குதான் நான் ஆணா உணர்ந்தேன்…” கூகுள் மேப் பார்க்கல, ஃபேக் கால் பண்ணல…” நள்ளிரவில் கேப்பில் சென்ற பெண் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்..! வைரல் வீடியோ..!!
இரவில் முழு நகரமும் உறங்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு பெண் தனியாக வீட்டிற்குப் பயணம் செய்வது என்பது மிகப்பெரிய போராட்டத்திற்குச் சமமானது. பயணம் முழுவதும் கூகுள் மேப்பைப் பார்த்துக்கொண்டே இருப்பது, வீட்டில் உள்ளவர்களிடம் போனில் பேசுவது போல் நாடகமாடுவது மற்றும் கேப் டிரைவரின் ஒவ்வொரு செயலையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது போன்றவை இரவில் பயணிக்கும் பெரும்பாலான பெண்களின் அன்றாட அனுபவமாகும். இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூகத்தின் கசப்பான உண்மையை வெளிப்படுத்தும் வகையிலான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தச் சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. அபூர்வா என்ற பெண் நள்ளிரவு 2 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அந்த நள்ளிரவு நேரத்தில் விமான நிலையத்திலிருந்து வீட்டிற்குச் செல்வதை நினைத்து அவர் பயமும் அச்சமும் அடைந்தார். இதனால் அவர் பெண் ஓட்டுநர் இயக்கும் கேப் ஒன்றைப் பதிவு செய்தார். அந்தப் பயணம் எந்தவித அசம்பாவிதமும் இன்றி மிகவும் அமைதியாகவும் இயல்பாகவும் அமைந்தது. இந்த ஒரு பயணம் அபூர்வாவின் மனதில் இருந்த பயத்தை முற்றிலும் போக்கியது.
https://www.instagram.com/reel/De_X1vQpZVT/?utm_source=ig_web_button_share_sheet
தனது இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அபூர்வா, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், “இன்று எனக்கு நான் ஒரு ஆணைப் போல உணர்ந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார். வழக்கமாகச் செல்லும் பயணங்களைப் போல இல்லாமல், இந்த முறை கேப் சரியான பாதையில் தான் செல்கிறதா என்று போனை அடிக்கடி பார்க்க வேண்டிய அவசியமோ, யாராவது வழியைக் கண்காணிக்கிறார்கள் என்று காட்டிக்கொள்ள போனில் பேசுவது போல் நாடகமாடவோ தேவைப்படவில்லை என்றும், எந்தவிதப் பயமும் பதற்றமும் இன்றி அமைதியாக அமர்ந்து பயணத்தை ரசிக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
