“பூ பறிக்கப் போன இடத்தில் கேட்ட அலறல் சத்தம்..” மகனைக் காப்பாற்றத் துடித்த தந்தை..! 23-வது மாடியில் நடந்த கோர விபத்து.. நொடியில் முடிந்த இரு உயிர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பூ பறிக்கப் போன இடத்தில் கேட்ட அலறல் சத்தம்..” மகனைக் காப்பாற்றத் துடித்த தந்தை..! 23-வது மாடியில் நடந்த கோர விபத்து.. நொடியில் முடிந்த இரு உயிர்கள்..!!

Published

on

கிரேட்டர் நொய்டாவில் உள்ள மகாகூன் மைவுட்ஸ் சொசைட்டியில் 23-வது மாடியில் இருந்து கீழே விழுந்து 40 வயது தந்தை மற்றும் அவரது 11 வயது மகன் ஆகிய இருவருமே பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. பிஸ்ரக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்த விபத்து, ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தை நொடிப்பொழுதில் சீரழித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை வீட்டில் பூஜை செய்துவிட்டு, காட்டு ஷ்யாம் கோயிலுக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்த ரண்தீப் பாத்ராவின் மனைவி காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தின்படி, வெள்ளிக்கிழமை காலை குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்வதற்காகத் திட்டமிட்டிருந்தனர். ரண்தீப் அதிகாலையிலேயே எழுந்து தனது 11 வயது மகன் ஆரவ்வை எழுப்பி, பூஜைக்குப் பூக்கள் பறித்து வருமாறு கூறியுள்ளார். பின்னர் தந்தையும் மகனும் பால்கனியில் இருந்த செடிகளில் பூக்கள் பறிக்கச் சென்றனர். மனைவியோ சமையலறையில் காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆரவ் அலறும் சத்தம் கேட்டுள்ளது.

Advertisement

பால்கனியில் இருந்த ஏணியில் ஏறி பூப் பறிக்க முயன்றபோது, தரையில் இருந்த ஈரப்பதம் காரணமாக ஆரவ் நிலைதடுமாறி பால்கனி கம்பியின் வெளியே தொங்கியதாகக் கூறப்படுகிறது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரண்தீப், தனது மகனைக் காப்பாற்றுவதற்காகப் பாய்ந்து சென்று அவனை மேலே இழுக்க முயன்றபோது, அவரது கால்களும் நழுவி இருவரும் 23-வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளனர். டெல்லி மத்திய செயலகத்தில் பிரிவு அதிகாரியாக (Section Officer) பணியாற்றி வந்த ரண்தீப் மற்றும் அவரது மகனை மீட்டுக் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in