LATEST NEWS
சோகத்தில் திமுக.. முன்னாள் MLA சோ.மா.ராமச்சந்திரன் காலமானார்..! தலைவர்கள் இரங்கல்..!!
திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சோ.மா.ராமச்சந்திரன் (99) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் சென்னை, அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில் 1984 முதல் 1988 வரை எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றியவர் ஆவார்.
மேலும், திமுகவில் ஒருங்கிணைந்த அண்ணா நகர் பகுதிச் செயலாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். இவரது மறைவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
