CINEMA
“தோத்துகிட்டே இருக்கியேடா…” இணையத்தில் தீயாய் பரவும் AI வீடியோ..! நடிகர் ஆனந்த்ராஜ் கொடுத்த மாஸ் ரியாக்ஷன்..!!
ஏஐ எனப்படும் தொழில்நுட்பம் பிரபலமடைந்த பிறகு, சமூக வலைத்தளங்களில் அதன் மூலம் உருவாக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் தான் தற்போது அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இணையத்தில் நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், பல நடிகைகளின் போட்டோக்கள் ஏஐ மூலம் மாற்றப்பட்டு வைரலாவது பற்றி அடிக்கடி சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன. மேலும், பல பிரபலங்களும் இதற்குத் தங்கள் வெளிப்படையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் பிரபல நடிகர் ஆனந்த்ராஜ் இருப்பது போன்ற ‘தோத்துகிட்டே இருக்கியேடா..’ என்ற ஏஐ வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோக்கள் இணையத்தில் பெரும் ட்ரெண்டாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வரும் நிலையில், இது குறித்து நடிகர் ஆனந்த்ராஜ் தரப்பிலிருந்து தனது பேட்டியின் மூலம் விளக்கம் மற்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.instagram.com/reel/De_yyuzBT2f/?utm_source=ig_web_button_share_sheet
இது குறித்து நடிகர் ஆனந்த்ராஜ் அளித்த பேட்டியில், “அதை யார் செய்து இருந்தாலும் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ட்ரெண்ட் ஆவது நல்லது. ஆனால், அதே நேரத்தில் கொஞ்சம் காயப்படுத்தாமல் இருந்தால் சந்தோசம்” எனத் தனது கோரிக்கையையும் வேண்டுகோளையும் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
