CRIME
ஐயோ கடவுளே.. அசுரவேகத்தில் வந்த கார்.. சாலையைக் கடக்க முயன்ற 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.. உறைய வைக்கும் திகில் வீடியோ..!!
துருக்கியின் சான்லியுர்ஃபா மாகாணத்தில், சாலையைக் கடக்க முயன்ற 9 வயது சிறுவன் ஹசன் புல்துக் மீது ஆசிரியை ஒருவரின் கார் பயங்கரமாக மோதியதில், அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இச்செல்வி பி. என்ற பள்ளி ஆசிரியை ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாகச் சாலையில் ஓடிவந்த சிறுவன் மீது மோதியதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து நடந்த சில நொடிகளிலேயே சிறுவன் ஹசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிர் இழந்த சோகம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூர விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆழ்ந்த இரங்கல்களும் அஞ்சலிகளும் குவிந்து வருகின்றன. விபத்தை ஏற்படுத்திய ஆசிரியை மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இந்தத் விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
