இதென்ன கொடுமை.? “ரூ.5 லட்சம் தாறோம் புகார் கொடுக்காத” வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. வழக்கை மூடி மறைக்க பேரம் பேசிய பஞ்சாயத்து..!! – cinefeeds
Connect with us

CRIME

இதென்ன கொடுமை.? “ரூ.5 லட்சம் தாறோம் புகார் கொடுக்காத” வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. வழக்கை மூடி மறைக்க பேரம் பேசிய பஞ்சாயத்து..!!

Published

on

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணை காவல் நிலையத்திற்குச் செல்ல விடாமல் தடுப்பதற்காக, ஊர் பஞ்சாயத்தில் அவருக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை பணம் தருவதாக பேரம் பேசப்பட்ட அதிர்ச்சித் தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ராணிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில், கடந்த நவம்பர் 1-ஆம் தேதி அன்று பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் தனியாக இருந்தபோது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. தினேஷ் விஸ்வாஸ் (30) என்ற நபர், அந்தப் பெண்ணின் வாயில் துணியைத் திணித்து, கதவை மூடிவிட்டு அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரம் கிராமத்திற்குத் தெரிந்ததும், சில உள்ளூர் முக்கியஸ்தர்கள் இரண்டு நாட்களாக பஞ்சாயத்து கூட்டி, பணத்தைக் கொடுத்து வழக்கை மூடி மறைக்க முயன்றதாகப் பெண்ணின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

இருப்பினும், பஞ்சாயத்து சமரசத்திற்கு உடன்படாத பாதிக்கப்பட்ட பெண், தனது சகோதரியுடன் ராணிகஞ்ச் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த குற்றவாளி தினேஷ் விஸ்வாஸைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சட்டவிரோதமாகப் பஞ்சாயத்து கூட்டிப் பண பேரம் பேசிய நபர்கள் மீதும் விசாரணை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in