“நீ கருப்பாக இருக்க” எனத் தினம் தினமும் சித்திரவதை.. திருமணமான 9 மாதங்களில் பெண் மர்ம மரணம்.. உ.பி.யில் அரங்கேறிய கொடூரம்.! – cinefeeds
Connect with us

Uncategorized

“நீ கருப்பாக இருக்க” எனத் தினம் தினமும் சித்திரவதை.. திருமணமான 9 மாதங்களில் பெண் மர்ம மரணம்.. உ.பி.யில் அரங்கேறிய கொடூரம்.!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், திருமணம் ஆகி வெறும் 9 மாதங்களே ஆன நிலையில், 30 வயதான ருச்சி மிஸ்ரா என்ற பெண் தனது புகுந்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து ருச்சியின் கணவர் அவரது குடும்பத்தினருக்குத் தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவித்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகளின் மரணச் செய்தி கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவரது தாய், இது தற்கொலை அல்ல, கொலை என்று குற்றம்சாட்டியுள்ளார். கடந்த பிப்ரவரி 2026-ல் சிசாமாவைச் சேர்ந்த கோபால் மிஸ்ரா என்பவருடன் ருச்சிக்குத் திருமணம் நடந்துள்ளது. திருமணமான நாள் முதலே, “நீ கருப்பாக இருக்கிறாய்” என்று கூறி கணவர் ருச்சியைக் கொடூரமாகத் திட்டி, தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வந்ததாக அவரது தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழப்பதற்கு முந்தைய நாள் ருச்சி தனக்கு போன் செய்து, “அம்மா, என்னை இங்கிருந்து கூட்டிச் சென்றுவிடு, இவர்கள் என்னை மிகக் கொடுமையாகத் சித்திரவதை செய்கிறார்கள்” என்று கதறியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ருச்சியின் குடும்பத்தினர், வரதட்சணைக் கொடுமை மற்றும் கொலைப் புகார் அளித்து அந்த இடத்தில் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ருச்சியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்துத் தெரிவித்த உதவி காவல் ஆணையர் (ACP), பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமிருந்து முறையான புகார் பெறப்பட்டதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in