CRIME
அடச்சீ.. கோயில் வாசலில் நடந்த கொடூரம்.. நகைக்காக 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற 20 வயது இளைஞன்..!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கெங்கேரி பகுதியில் உள்ள கொனாசந்திரா பகுதியில் ஒரு கோயில் முன்பு தூங்கிக் கொண்டிருந்த 65 வயது மூதாட்டியை 20 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளி சாத்விக் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். முதிய பெண்ணின் தங்க மோதிரம் மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் அவர் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டதில் அவரது விலா எலும்புகள் உடைந்துள்ளன. அதன்பிறகு கொடூரமான செயலில் ஈடுபட்டு, இறுதியாக மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான்.
இந்தக் கொடூரச் சம்பவத்தை அங்கு சென்ற உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் பார்த்துவிட்டு விசாரிக்க முயன்றபோது, அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில், மூதாட்டியின் கையில் இருந்த மோதிரம் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணை மற்றும் மருத்துவப் பரிசோதனையில், மூதாட்டி கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
போலீசாரின் விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள சாத்விக் ஒரு பழம்பெரும் குற்றவாளி என்பதும், அவர் மீது ஏற்கனவே சங்கிலித் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளியைக் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
