நெஞ்சை உலுக்கும் சோகம்..! திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற மணமகளைப் பறித்த எமன்… ஹல்தி சடங்கு நடக்க வேண்டிய வீட்டில் இறுதிச் சடங்கு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நெஞ்சை உலுக்கும் சோகம்..! திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற மணமகளைப் பறித்த எமன்… ஹல்தி சடங்கு நடக்க வேண்டிய வீட்டில் இறுதிச் சடங்கு..!!

Published

on

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தீபாஞ்சலி நகரில், திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற மென்பொருள் பொறியாளர் சிந்துஸ்ரீ (29) மற்றும் அவரது உறவினர் வித்யா (19) ஆகியோர் மீது லாரி மோதியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருமண கொண்டாட்டங்களுக்கான ஹல்தி சடங்கிற்கு பதிலாக, தற்போது இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டிய துயர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சிந்துஸ்ரீயின் தந்தை நஞ்சுண்டப்பா கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

Advertisement

இந்த கோர விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அப்பகுதியில் சரக்கு வாகனங்கள் செல்வதற்கு முறையான நேரக் கட்டுப்பாடுகள் இல்லாததே இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in