LATEST NEWS
அய்யயோ.. ஓடும் ரயிலுக்கு அடியில் விழுந்த பெண்.. 3 பெட்டிகள் கடந்து சென்ற கொடூரம்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. பதைபதைக்கும் சம்பவம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் ஒருவர் கால் தவறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கீழே விழுந்த நிலையில், ரயிலின் மூன்று பெட்டிகள் அவருக்கு மேலே கடந்து சென்றுள்ளன.
உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் விரைந்து செயல்பட்டு அந்தப் பெண்ணைப் பத்திரமாக மீட்டு உயிரைக் காப்பாற்றினர். ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்தப் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.
