LATEST NEWS
குஷியோ குஷி..! இனி சாதாரண சைக்கிள் இல்லை.. ஹெல்மட், வாட்டர் பாட்டிலுடன் ‘ஹை-டெக்’ சைக்கிள்… 5.32 லட்சம் மாணவர்களுக்குக் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்..!!
தவெக அரசின் பட்ஜெட்டில் 11-ஆம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஹெல்மட் மற்றும் குடிநீர் பாட்டில் வசதிகளுடன் கூடிய விலையில்லா நவீன சைக்கிள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைச் செயல்படுத்தும் வகையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் தலைமையில் 11 பேர் கொண்ட கொள்முதல் குழு அமைக்கப்பட்டது. இக்குழு 9 கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதன் இறுதியில், ஹீரோ சைக்கிள்ஸ் (Hero Cycles) நிறுவனத்தைத் தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.
முன்னதாக வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில், ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் மாணவர்களுக்கான சைக்கிளுக்கு ரூ.7,235-ம், மாணவிகளுக்கான சைக்கிளுக்கு ரூ.7,476-ம் கோரியிருந்தது. ஆனால், அரசின் 9 கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மாணவர்களின் சைக்கிள் விலையில் ரூ.1,975 குறைத்து ரூ.5,260-க்கும், மாணவிகளின் சைக்கிள் விலையில் ரூ.2,346 குறைத்து ரூ.5,130-க்கும் வழங்க அந்நிறுவனம் முன்வந்தது. இதன் அடிப்படையில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்திற்குக் கொள்முதல் ஆணை வழங்க அரசு அமைத்த குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 2,37,133 மாணவர்களுக்கும், 2,95,255 மாணவிகளுக்கும் என மொத்தம் 5,32,388 பேருக்கு விலையில்லா நவீன சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக 276.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய விலை குறைப்புப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 276.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
