“தோற்றாலும் களத்தில் இருப்பவனே வீரன்..” தண்ணீர் தர மறுக்கும் காங்கிரசுடன் கூட்டணி ஏன்…? தவெகவை நோக்கி சீமான் வீசிய அனல் பறக்கும் கேள்விகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தோற்றாலும் களத்தில் இருப்பவனே வீரன்..” தண்ணீர் தர மறுக்கும் காங்கிரசுடன் கூட்டணி ஏன்…? தவெகவை நோக்கி சீமான் வீசிய அனல் பறக்கும் கேள்விகள்..!!

Published

on

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மேகதாது அணை கட்டியே தீருவேன் என்று கூறும் காங்கிரசுடன் தவெக எப்படி கூட்டு வைக்க முடிந்தது என்று கேள்வி எழுப்பினார். மாநில உரிமைகளைப் பறிக்கும் கட்சியுடன் சேர்ந்து கொண்டு எப்படி மக்களின் உரிமைகளை காப்பாற்றுவீர்கள் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் பேசமாட்டார், செயலில் காட்டுவார் என்கிறார்கள் ஆனால் அவர் இதுவரை காட்டிய செயல்களில் ஒன்றையாவது கூற முடியுமா என வினவினார். செஞ்சி சிறுமி காணாமல் போன விவகாரம், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரம், துணை சபாநாயகர் விவகாரம் உள்ளிட்டவற்றில் எந்த நடவடிக்கையும் எடுக்க முதலமைச்சருக்குத் துணிவில்லை என்றும், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வைத் தகுதி நீக்கம் செய்ய முடியாதா, மீண்டும் தேர்தல் நடத்தினால் வெற்றி பெற முடியாதா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், அந்த நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் எப்படி மாஸ் ஹீரோ? மக்களை சந்திக்க பயம் ஏன்? என்றும் அவர் சாடினார்.

Advertisement

வென்றால்தான் களத்தில் இருப்பீர்களா என்று கேள்வி எழுப்பிய சீமான், “தோற்றாலும் களத்தில் இருப்பவனே வீரன். தலைவன். பெரும்பான்மை முக்கியமல்ல; நேர்மையே முக்கியம்” என்று தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in