பதற வைக்கும் துயரச் சம்பவம்… பாலத்திலிருந்து ஆற்றில் குதித்த 2 சிறுமிகள் தற்கொ**… சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

பதற வைக்கும் துயரச் சம்பவம்… பாலத்திலிருந்து ஆற்றில் குதித்த 2 சிறுமிகள் தற்கொ**… சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி..!!

Published

on

இமாச்சலப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள குமார்வின் பாலத்திலிருந்து, இரண்டு சிறுமிகள் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாலத்தின் அருகே பொதுமக்கள் திரண்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு, ஆற்றிலிருந்து இரண்டு சிறுமிகளின் சடலங்களும் மீட்கப்பட்டதாக பிலாஸ்பூர் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் தீமான் உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisement

சிறுமிகள் இந்த விபரீத முடிவை எடுத்ததற்கான காரணம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. மீட்கப்பட்ட சடலங்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள காவல்துறையினர், சிறுமிகளின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி சம்பவத்திற்கான பின்னணியைத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in