LATEST NEWS
இது என்னடா கூத்து.. டேட்டிங் ஆப் காதலனைத் தேடி கனடாவிலிருந்து வந்த 61 வயதுப் பெண்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்டைப் பாருங்க.. பரபரப்பு பின்னணி..!!
டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான இளைஞரைத் திருமணம் செய்துகொள்ளும் ஆசையில் கனடாவிலிருந்து இந்தியா வந்த 61 வயதுப் பெண், வயதைக் காரணம் காட்டி அந்த நபர் திருமணத்திற்கு மறுத்ததால் ஏமாற்றமடைந்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவின் பானிபத்தைச் சேர்ந்த நிதின் என்ற நபர், சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு டேட்டிங் செயலி வழியாக 61 வயதான கனடியப் பெண்ணுடன் பழகி, அவரைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்துள்ளார். இதனை நம்பி நவம்பர் 11-ஆம் தேதி சுற்றுலா விசாவில் டெல்லி வந்த அந்தப் பெண்ணை நிதின் விமான நிலையத்தில் இருந்து வரவேற்று, ராஜஸ்தானின் நீம்ரானாவில் உள்ள ‘பிபி பில்டர்ஸ் சொசைட்டி’ குடியிருப்பில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார். ஆனால், இரண்டு நாட்களுக்குப் பிறகு திருமணம் குறித்த பேச்சுவார்த்தையின் போது அப்பெண்ணுக்கு 61 வயது என்பதை அறிந்த நிதின், வயதைக் காரணம் காட்டித் திருமணம் செய்ய மறுத்துவிட்டதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கனடியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு புகார் அளித்ததைத் தொடர்ந்து, தூதரகத்தின் தகவலின் பேரில் நீம்ரானா காவல்துறையினர் நவம்பர் 13 அதிகாலை சம்பவ இடத்திற்கு விரைந்து தலையிட்டனர். போலீசார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய நிலையில், அந்தக் கனடியப் பெண் பாதுகாப்பாகக் கோட்புட்லியில் உள்ள பராமரிப்பு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், அவரைப் பத்திரமாகக் கனடாவிற்குத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதோடு, இச்சம்பவத்தின் அனைத்துக் கோணங்களும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாகக் காவல் ஆய்வாளர் சுரேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
