CRIME
ஐயோ கடவுளே.. பயங்கர சத்தத்துடன் வெடித்த பிரஷர் குக்கர்… 18 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. திடுக்கிடும் பின்னணி..!!
பீகார் மாநிலம் பகாஹா பகுதியில், வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது பிரஷர் குக்கர் வெடித்ததில் 18 வயது இளம்பெண்ணுக்கு முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை, ரீமா குமாரி (18) என்ற அந்த இளம்பெண் தனது வீட்டின் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பிரஷர் குக்கர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் சமையலறையில் இருந்த ரீமா குமாரியின் முகத்தில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு அவர் வலியால் அலறித் துடித்தார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர், காயமடைந்த ரீமா குமாரியை உடனடியாக மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமையலறையில் பிரஷர் குக்கர் வெடித்து இளம்பெண் காயமடைந்த இந்தத் துயரச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
