Uncategorized
அடேங்கப்பா..! ஒரே ஒரு தேங்காயை ₹2.55 லட்சத்திற்கு ஏலம் எடுத்த பெண் பக்தர்.. என்ன காரணம் தெரியுமா..? பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம்..!!
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபோகத்தில், மாங்கல்யம் சுற்றப்பட்ட புனிதத் தேங்காயைப் பெண் பக்தர் ஒருவர் ரூ.2.55 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார். திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டுச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில், இந்த ஏல நிகழ்வு பக்தர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
திருக்கல்யாணச் சடங்குகளின் போது சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாங்கல்யம் அணிவிக்கப்பட்ட பிறகு, அந்த மாங்கல்யம் சுற்றப்பட்ட தேங்காயை ஏலம் விடுவது இக்கோயிலின் பாரம்பரிய வழக்கமாகும். இதனை வீட்டில் வைத்து வழிபட்டால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பதும், செல்வ வளம் பெருகும் என்பதும் பக்தர்களின் ஆழமான நம்பிக்கையாக உள்ளது.
இதனால், இந்தப் புனிதத் தேங்காயைப் பெறுவதற்காகப் பக்தர்கள் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், பெண் பக்தர் ஒருவர் அதிகபட்சமாக ரூ.2.55 லட்சத்திற்கு அதனை ஏலம் எடுத்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அந்தப் பெண் பக்தருக்குப் பிரசாதங்களுடன் மாங்கல்யம் சுற்றப்பட்ட தேங்காய் வழங்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
