“வீட்டிற்குள் கள்ளக்காதலனுடன் மனைவி…” வெளியூர் செல்வதாக நாடகமாடி நள்ளிரவில் ஸ்கெட்ச் போட்ட கணவன்… நடுவீட்டில் அரங்கேறிய பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“வீட்டிற்குள் கள்ளக்காதலனுடன் மனைவி…” வெளியூர் செல்வதாக நாடகமாடி நள்ளிரவில் ஸ்கெட்ச் போட்ட கணவன்… நடுவீட்டில் அரங்கேறிய பயங்கரம்..!!

Published

on

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டியைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி சரவணக்குமார் (27). இவருக்கும் பொன்னழகு (21) என்பவருக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், பொன்னழகுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான கட்டிடத் தொழிலாளி ஆனந்தராஜ் (30) என்பவருக்கும் பணியிடத்தில் பழக்கம் ஏற்பட்டு, அது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இது குறித்து அறிந்த சரவணக்குமார், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இருவரையும் அழைத்துப் பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும், அவர்கள் தங்களது பழக்கத்தைக் கைவிடாமல் தொடர்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நவம்பர் 16 சரவணக்குமார் வெளியே செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். கணவர் வீட்டில் இல்லாததை அறிந்த ஆனந்தராஜ், பொன்னழகின் வீட்டிற்கு வந்துள்ளார். ஏற்கெனவே இது குறித்துச் சந்தேகமடைந்து மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்த சரவணக்குமார், வீட்டிற்குள் இருவரும் ஒன்றாக இருப்பதைக் கண்டு கடும் ஆத்திரமடைந்தார். உடனடியாக வீட்டிற்குள் புகுந்த அவர், அரிவாளாலும் கல்லாலும் சரமாரியாகத் தாக்கியதில் பொன்னழகு மற்றும் ஆனந்தராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த நகர் காவல் நிலைய போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலை செய்துவிட்டு வீட்டிலேயே அமர்ந்திருந்த சரவணக்குமாரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in