LATEST NEWS
தந்தையின் இடத்தில் மகன்..! கொளத்தூர் தொகுதியை வி.எஸ்.பி.சதீஷ்குமாரிடம் ஒப்படைக்க முதல்வர் விஜய் திட்டம்..? அரசு அதிகாரிகளுக்குப் பறந்த வாய்மொழி உத்தரவு..!!
கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு மறைந்ததைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் வி.எஸ்.பாபுவின் மகன் வி.எஸ்.பி.சதீஷ்குமாரை வேட்பாளராகக் களமிறக்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வரை, கொளத்தூர் தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை வி.எஸ்.பி.சதீஷ்குமார் நிர்வாக ரீதியாகக் கவனித்துக் கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, தொகுதி சார்ந்த பணிகளில் வி.எஸ்.பி.சதீஷ்குமாருக்கு அரசுத் தரப்பிலிருந்து முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
