LATEST NEWS
“தி.மு.க என்றாலே ஊழல் பேர்வழிகள் என்று அர்த்தம்” கைது செய்வது தப்பில்ல… ஹெச். ராஜா அதிரடிப் பேட்டி..!
தி.மு.க. என்றாலே ஊழல் பேர்வழிகள் என்று அர்த்தம் எனவும், தி.மு.க.வினரைக் கைது செய்து சிறையில் அடைப்பது தவறில்லை எனவும் பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச். ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றச்சாட்டுக்குள்ளானவர்களை வெளியில் வர முடியாத அளவிற்கு உள்ளே வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கண்டிப்பாகத் தீபம் ஏற்றப்பட வேண்டும் என வலியுறுத்திய ஹெச். ராஜா, தீபம் ஏற்ற முடியாது என்று கூறுபவர்கள் பாரதத்தாயின் பிள்ளைகளாக இருக்க முடியாது எனக் கூறினார். 1931-ம் ஆண்டு லண்டன் கவுன்சில் தீர்ப்பின்படி 33 சென்ட் தவிர மற்ற இடங்களுக்கு உரிமையில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தீபம் ஏற்ற மறுத்தால் இந்த அரசாங்கத்தை ஒரு நிமிடம் கூட நீடிக்க விடக்கூடாது என்றும் சாடினார்.
இதனிடையே, திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இருப்பினும், ஒருமுறை நடவடிக்கையாக வரும் கார்த்திகை தீபத்தன்று தேவஸ்தானம் மற்றும் அரசு அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டும் தீபமேற்ற அனுமதி அளித்துள்ள நீதிமன்றம், பொதுமக்களுக்கு அனுமதி மறுத்ததுடன் தேவைப்பட்டால் மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
