“இரவு வாருங்கள், அவரைக் கைது செய்யலாம்…” புகார் கொடுக்க வந்த விதவைப் பெண்ணை அறைக்குள் வரவழைத்த எஸ்.ஐ செய்த பகீர் காரியம்.. போலீஸ் நிலையத்தில் நடந்த கொடுமை..!! – cinefeeds
Connect with us

CRIME

“இரவு வாருங்கள், அவரைக் கைது செய்யலாம்…” புகார் கொடுக்க வந்த விதவைப் பெண்ணை அறைக்குள் வரவழைத்த எஸ்.ஐ செய்த பகீர் காரியம்.. போலீஸ் நிலையத்தில் நடந்த கொடுமை..!!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில், கணவரை இழந்த 38 வயது விதவைப் பெண் ஒருவருக்கு இழைக்கப்பட்ட கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் கணவர் உயிரிழந்த நிலையில், அவரது மைத்துனர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவருடன் நெருக்கமாக இருந்துவிட்டு, பின்னர் திருமணத்திற்கு மறுத்து ஏமாற்றியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தனது மைத்துனர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தை நாடியுள்ளார்.

ஆனால், புகார் அளிக்க வந்த அந்தப் பெண்ணின் நிராதரவான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர், “இரவு நேரத்தில் வாருங்கள், நாம் சென்று அவரைக் கைது செய்யலாம்” எனக் கூறி வரவழைத்து, தனது அறையிலேயே அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். பாதுகாப்பு தேடிச் சென்ற இடத்திலேயே காவல்துறை அதிகாரியால் இத்தகைய கொடூரம் நிகழ்த்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in