LATEST NEWS
“அன்பில் மகேஸ் உத்தரவின் பேரிலேயே பணம் வசூலித்தோம்” அதுமட்டுமில்ல… முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் வாக்குமூலத்தால் தமிழக அரசியலில் பூகம்பம்..!!!
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் உத்தரவின் பேரிலேயே சென்னையில் அலுவலகம் தொடங்கித் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்ததாக முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தனியார் பள்ளிகள் தொடர்பான விவகாரங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த வசூல் விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஏற்கனவே செயல்பட்டு வந்த தனியார் பள்ளிகளின் பல சங்கங்களைக் கலைத்துவிட்டு, புதிதாக ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தை’ தொடங்கியதாகவும் முத்துக்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலமாகத் தனியார் பள்ளிகளை ஒருங்கிணைத்து இந்த வசூல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, இந்தச் சங்கத்தைத் தொடங்கியதற்கும், தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்ததற்கும் அன்பில் மகேஸின் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் இருந்ததாக முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் கூறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது பெரும் விவாதத்தையும் அரசியல் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
