TRENDING
கல்லூரி பெண்ணின் செல் போன் மூலம்… ’70 வதுக்கு மேற்பட்ட கல்லூரி பெண்களுக்கு ஆபாச படங்கள்’… “அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்”..!
வினோத்( 24 )இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்துவருகிறார். இவர் தென்காசி மாவட்டம் முள்ளிக்குளம் என்று கிராமத்தை சேர்ந்தவர். கல்லூரி பெண் ஒருவர் தனது செல் போனை தவறவிட்டுள்ளார். அந்த போன் வினோத்திற்கு கிடைத்துள்ளது அதனை எடுத்து அதில் இருக்கும் எண்களுக்கு எல்லாம் ஆபாசப்படங்களை அனுப்பி உள்ளார்.
மேலும் அந்த போன் கல்லூரி பெண்ணுடையது என்பதால் அதில் இருக்கும் பெண்கள் நெம்பருக்கு பெண் குரலில் பேசி ஆசைவார்த்தை கூறியுள்ளார். அந்த வகையில் திருப்பத்தூர் பெண்ணிற்கு ஆபாச வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். இதனை அறிந்த பெற்றோர்கள் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படியில் வினோத்திற்கும் இடத்திற்கு சென்ற திருப்பத்தூர் போலீசார் பின்னர் அவரை கைது செய்த்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதுபோல சுமார் 70 பெண்களுக்கு ஆபாச படங்கள் மற்றும் வீடியோ அனுப்பியுள்ளது தெரியவந்தது. பின்னர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.
