Uncategorized
கூடவே நடித்த நடிகரை திருமணம் முடித்த அவன் இவன் பட நடிகை…. அந்த நடிகர் யார் தெரியுமா….????
கடந்த 25ஆம் ஆண்டு மிஸ் ஆந்திரா பட்டத்தை வென்ற தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை மது ஷாலினி. இவர் இரண்டு வருடங்கள் தெலுங்கு படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பழனியப்பா கல்லூரி படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
அதன் பிறகு சில வருடங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் தவித்து வந்த இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் தான் அவன் இவன். பாலா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த அசத்தியவர் தான் மது ஷாலினி. இவர் இறுதியாக விசித்திரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார்.
இந்நிலையில் இவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். தன்னுடன் பஞ்சரக்ஷரம் திரைப்படத்தில் நடித்த கோகுல் ஆனந்த் என்ற நடிகரை காதலித்து இவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.’
