நடிகர் சிவகார்த்திகேயன் இப்போ எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?…. கேட்டா ஷாக் ஆயிடுவீங்க….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போ எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?…. கேட்டா ஷாக் ஆயிடுவீங்க….!!!!

Published

on

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வசூலை அள்ளுமோ அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் சாதனை படைத்துள்ளன.

இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த அக்டோபர் 21ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் 10 நாளில் 45 கோடி வரை வசூல் செய்தது. இன்றும் பல திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக அயலான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

Advertisement

அதுமட்டுமல்லாமல் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு திரைப்படத்திற்கு பிறகு உருவாக இருக்கும் புதிய தமிழ் திரைப்படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் தமிழ் ஆகியுள்ளார். அந்தத் திரைப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் 27 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் 35 கோடி முதல் 40 கோடி வரை சிவகார்த்திகேயன் கேட்டதாகவும் ஆனால் இறுதியில் 27 கோடி சம்பளம் தான் உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in