CRIME
“நான் சாகப் போகிறேன்..” ஜிம் மாஸ்டருக்கு வந்த லாஸ்ட் மெசேஜ்.. 13-வது மாடியில் இருந்து 14 வயது மாணவி எடுத்த கொடூர முடிவு.. திடுக்கிடும் பின்னணி..!!
சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு ஜி.என்.டி சாலையில் உள்ள பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், 14 வயது பள்ளி மாணவி பாலக் 13-வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிஜய்குமார் என்பவரின் மகளான பாலக், சூரப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் தனது பெற்றோர்கள் அண்ணனை நன்றாகக் கவனித்துக் கொள்வதாகவும், தன்னைத் தாழ்வாக நடத்துவதாகவும் அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவத்தன்று தனது உடற்பயிற்சிக் கூட மாஸ்டருக்கு “நான் சாகப் போகிறேன்” என்று அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, உடனடியாக அடுக்குமாடி குடியிருப்பின் 13-வது மாடி மொட்டை மாடிக்குச் சென்று பாலக் கீழே குதித்துள்ளார். இதில் கை, கால் எலும்புகள் முறிந்து, பலத்த ரத்தக் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மாதவரம் போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தத் தற்கொலை குறித்துப் பெற்றோர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
