LATEST NEWS
10 வருடங்களுக்குப் பின் ஒரே நாளில் மோதும் வாரிசு, துணிவு…. ரசிகர்களுக்கு பொங்கல் சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர்கள் தான் நடிகர் விஜய் மற்றும் அஜித். இவர்களின் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகும் பட்சத்தில் அவர்களின் ரசிகர்களுக்கு அதை விருந்துதான். அவ்வகையில் பல வருடங்களுக்குப் பிறகு வருகின்ற பொங்கலுக்கு விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. அதாவது வம்சி இயக்கத்தில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்த பிரகாஷ்ராஜ், சரத்குமார் மற்றும் குஷ்பு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
https://twitter.com/SVC_official/status/1610710714880253955
அதனைப் போலவே எச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் மஞ்சுவாரியார் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என் நிலையில் விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் அதாவது வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என படக் குழு அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதே சமயம் இரண்டு படங்களின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் செம்ம கொண்டாட்டத்தில் உள்ளனர்.
https://twitter.com/BoneyKapoor/status/1610633992352698368
