VIDEOS
செல்பி எடுக்க வந்த ரசிகர்…. கோபத்தில் போனை பிடுங்கி உடைத்தெறிந்த ரன்பீர் கபூர்…. வைரலாகும் வீடியோ….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரன்பீர் கபூர். இவர் அடிக்கடி தனது மனைவி ஆலியா பட் மற்றும் குழந்தையுடன் வெளியில் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும். இருந்தாலும் தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று பத்திரிகையாளர்களை இவர் கேட்டுக் கொண்டதால் இது நாள் வரை அவரின் குழந்தை புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் ரன்பீர் கபூருடன் செல்பி எடுப்பதற்காக ஒரு ரசிகர் பலமுறை முயற்சி செய்துள்ளார். அப்போது ரசிகரின் செயலைக் கண்டு மிகுந்த கோபமடைந்தார் அன்பிற்கபூர் அவரின் போனை வாங்கி தூக்கி எரிந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கருத்துக்களை பதிவிட்டு வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
https://twitter.com/Trendulkar/status/1618904447182311424