CRIME
காதலனுடன் சென்ற 16 வயது மகள்.. தந்திரமாக வரவழைத்து தந்தையே செய்த பகீர் காரியம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!1
உத்தரப் பிரதேச மாநிலம் ஔரையா மாவட்டத்தில், தனது காதலனுடன் ஓடிச் சென்று குடும்பம் நடத்த முயன்ற 16 வயது மைனர் மகளை, தந்தை சந்திரபிரகாஷ் என்பவர் தந்திரமாக வீட்டிற்கு வரவழைத்துக் கொடூரமாகக் கொலை செய்து உடலைத் தரையில் புதைத்த கௌரவக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதல் அல்லது காதலின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய மகளை, அவசர அவசரமாகச் சமாதானம் பேசுவதாகக் கூறி சந்திரபிரகாஷ் வரவழைத்துள்ளார். பின்னர், அவரும் அவரது கூட்டாளியான தீபக்கும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கொலை செய்து, யாருக்கும் தெரியாமல் உடலை மண்ணுக்குள் புதைத்து மறைத்துள்ளனர்.
இந்தக் கொடூரமான படுகொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ஔரையா மாவட்ட போலீசார், தீவிர விசாரணை நடத்திப் புதைக்கப்பட்ட மைனர் பெண்ணின் உடலைத் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், இந்தத் திட்டமிட்ட கௌரவக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான தந்தை சந்திரபிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளி தீபக் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கௌரவம் என்ற பெயரில் சொந்த மகளையே தந்தை படுகொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
