LATEST NEWS
மிரட்டலான வில்லன் நடிகர் ஆனந்த்ராஜ்-க்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா?.. வைரலாகும் குடும்ப புகைப்படம்…!!

தமிழ் சினிமாவில் 90களில் மிரட்டலான வில்லனாக கொடிகட்டி பறந்தவர்தான் நடிகர் ஆனந்த்ராஜ். இவர் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தாய் மேல் ஆணை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது திரை பயணத்தை தொடங்கினார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பலரின் மனதையும் கவர்ந்தவர். இவரின் நடிப்பில் மூவேந்தர், சிம்மராசி , சூரியவம்சம், பாட்டாளி, வானத்தைப்போல, நரசிம்மா மற்றும் கண்ணுபட போகுதய்யா உள்ளிட்ட பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.
வில்லனாக பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சமீப காலமாக காமெடி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். அதாவது சமீபத்தில் பிரின்ஸ், நாய் சேகர் ரிட்டன்ஸ், இடியட் மற்றும் கோப்ரா போன்ற பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஆனந்தராஜிற்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் தற்போது குடும்பத்துடன் ஆனந்தராஜ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.