LATEST NEWS
குழந்தை இருப்பதே எனக்கு தெரியாது….! விவாகரத்து செய்யாமல் ரிலேஷன்ஷிப்….. அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து அர்னவ்….!!!!

தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் நடிகர் அர்னவ் மற்றும் நடிகை திவ்யா ஆகியோரின் பிரச்சனை தான். தமிழ் சினிமாவில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கேளடி கண்மணி என்ற சீரியலில் நடிகர் அர்னவ் மற்றும் நடிகை திவ்யா இருவரும் சேர்ந்து நடித்து வந்தனர். அந்த சீரியலில் நட்பாக இருந்த இவர்கள் அதன்பிறகு காதலிக்க ஆரம்பித்து லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்.
அதன் பிறகு நடிகை திவ்யா மகாராசி என்ற சீரியலிலும், அதைத் தொடர்ந்து தற்போது செவ்வந்தி என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். திவ்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனை அவரே ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து நடிகர் அர்னவ் உடன் இருந்து வந்த இவர் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். சில வாரங்களுக்கு முன்பு இதனை தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்தார் திவ்யா.
அது மட்டும் இல்லாமல் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறினார். தற்போது கடந்த வாரம் திடீரென்று மருத்துவமனையில் இருந்து ஒரு வீடியோ வெளியிட்ட இவர் செல்லமா சீரியல் நடிகையுடன் தனது கணவர் நெருக்கமாக இருப்பதாகவும், இதனால் என்னை அடித்து சித்திரவதை செய்வதாக கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் அர்னவ் உதைத்ததில் எனது கரு கலையும் நிலைமையில் உள்ளது என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து தனது மனைவி திவ்யா அவருடைய நண்பர் ஈஸ்வரன் இணைந்து கருவை கலைப்பதற்கு இப்படி நாடகம் போட்டு வருகிறார் என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இருவரும் ஐந்து வருடங்களுக்கு மேலாக காதலித்தோம். அவருக்கு கர்நாடகாவில் ஏற்கனவே திருமணம் ஆனது பற்றி எனக்கு தெரியும். ஆனால் அந்த உறவு முறிந்து விட்டதாக கூறியிருந்தார். நாங்கள் திருமணம் செய்து கொள்ளும்போது விவாகரத்து பேப்பரை கேட்டேன் ஜனவரி மாதம் தான் விவாகரத்து ஆனதாக குறிப்பிட்டுள்ளது. அப்படி என்றால் முதல் கணவரை விவாகரத்து செய்யாமலேயே எனது உன்னுடன் இருந்து வந்துள்ளார். மேலும் அவருக்கு ஒரு மகள் இருப்பதே எனக்கு தெரியாது. ஆறு வயதான ஜெய்ஷ்னாவை நிறைய முறை பார்த்திருக்கிறேன். அவர் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். அந்த குழந்தை யாரு என்று நான் கேட்டபோது எல்லாம் அக்கா குழந்தை என்று கூறி வந்தார் என பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் அர்ணவ்.