LATEST NEWS
தாய் தந்தைக்காக நெப்போலியன் செய்த நிகழ்ச்சி செயல்…. இத்தனை நாள் இது தெரியாம போச்சே…. இதோ நீங்களே பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தை வெகுவாக கவர்ந்த நடிகர் நெப்போலியன். இவர் அந்த காலகட்டத்தில் நடிப்பில் கொடிகட்டி பறந்தவர். பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வரை வில்லன் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தாலும் ஒரு சில படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தற்போது தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் வசித்து வருகின்றார். இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும் தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். அவரின் மூத்த மகன் தனுசுக்காக அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளார். 23 வருடங்களாக அமெரிக்காவில் ஐடி கம்பெனி நடத்திக் கொண்டு அதே சமயம் விவசாயமும் செய்து வருகிறார் நெப்போலியன்.
இந்த நிலையில் நெப்போலியன் தன்னுடைய தாய் சரஸ்வதி மற்றும் சிவ பக்தரான தந்தை துரைசாமிக்கு கோவில் கட்டிய தகவலை பகிர்ந்துள்ளார். அவரின் குடும்பத்தினர் பெற்றோர்கள் சமாதியில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகிறார்கள். அந்த சமாதியை சுற்றி நெப்போலியன் தந்தைக்குப் பிடித்த சந்தன மரம், கருங்காலி மரம் மற்றும் சிவப்பு செம்பருத்தி மரங்களை நட்டு வளர்த்து வருகின்றனர். அது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.