LATEST NEWS
திருமணமாகி 10 வருடங்கள் கழித்து கர்ப்பமான நடிகர் ராம்சரண் மனைவி…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் சிரஞ்சீவி. இவரைப் போலவே அவரின் மகனும் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது மகன் ராம்சரனை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். அவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் மற்றும் ஆச்சாரியா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தெலுங்கு சினிமாவில் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதனிடையே ராம்சரண் கடந்த 2012 ஆம் ஆண்டு உபசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் பத்து வருடம் கழித்து தனது மருமகள் கர்ப்பமாகி உள்ளதாக சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
— Chiranjeevi Konidela (@KChiruTweets) December 12, 2022