LATEST NEWS
சென்னையில் அந்த இடத்தில் பிரம்மாண்டமான வீட்டை வாங்கிய நடிகர் சந்தானம்…. வாழ்த்தும் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னாடி காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாக திகழ்பவர் நடிகர் சந்தானம். எப்பொழுதும் திரைப்படங்களில் கவுண்டர் டயலாக்குகளுடன் அனைவரையும் சிரிக்க வைக்கும் சந்தானம் சில வருடங்களாக ஹீரோவாக களமிறங்கியுள்ளார். அவர் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் குலு குலு. இந்தத் திரைப்படத்தில் ஆக்சன் கிங் போல சந்தானம் களமிறங்கியுள்ளார்.
ஒரு பக்கம் ஹீரோவாகவும் மறுபக்கம் காமெடி நடிகராகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இந்தத் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் சந்தானம் சென்னையில் முக்கிய இடமாக கருதப்படும் மறைந்த ஜெயலலிதா, நடிகர் ரஜினி மற்றும் தனுஷ் என பலரும் இருக்கும் போயஸ் கார்டன் இடத்தில் ஒரு பிரம்மாண்டமான வீட்டை வாங்கியுள்ளார். அந்த வீட்டின் விலை பல கோடி கணக்கில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சந்தானத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.