LATEST NEWS
சந்திரமுகி 2 படத்தில் சொர்ணா இருக்காங்களா, இல்லையா?.. ஆடியோ லாஞ்சில் ஓபன் ஆக சொன்ன வடிவேலு..!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் பி. வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 18 வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகி 2 திரைப்படத்தை தற்போது பி வாசு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். அதனைப் போலவே சந்திரமுகி ரோலில் பாலிவுட் நடிகையான கங்கணா ரனாவத் நடித்துள்ள நிலையில் ராதிகா, வடிவேலு, லக்ஷ்மி மேனன் மற்றும் சிருஸ்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சர்வதேச அளவில் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என பான் இந்தியா படமாக சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரணாவத், வடிவேலு மற்றும் லைகா நிறுவனர் சுபாஸ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய நடிகர் வடிவேலு, சந்திரமுகி 2 திரைப்படத்தில் பெயிண்டர் கோபாலு கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளதாகவும் ஆனால் முதல் பாகத்தில் தன்னுடைய மனைவியாக வந்த சொர்ணா கேரக்டர் இந்த படத்தில் கிடையாது என்றும் வருத்தத்துடன் கூறினார். இந்த செய்தி ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.