சந்திரமுகி 2 ஆடியோ லாஞ்சில் கல்லூரி மாணவர் மீது தாக்குதல்.. மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு உருக்கமான பதிவு போட்ட ராகவா லாரன்ஸ்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

சந்திரமுகி 2 ஆடியோ லாஞ்சில் கல்லூரி மாணவர் மீது தாக்குதல்.. மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு உருக்கமான பதிவு போட்ட ராகவா லாரன்ஸ்..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் பி. வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 18 வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகி 2 திரைப்படத்தை தற்போது பி வாசு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அதனைப் போலவே சந்திரமுகி ரோலில் பாலிவுட் நடிகையான கங்கணா ரனாவத் நடித்துள்ள நிலையில் ராதிகா, வடிவேலு, லக்ஷ்மி மேனன் மற்றும் சிருஸ்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சர்வதேச அளவில் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என பான் இந்தியா படமாக சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிலையில் அந்த நிகழ்ச்சியின் போது ஆடியோ விழாவை காண வந்திருந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கும் அங்கிருந்த விழா பௌசர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

அதில் மாணவர் கடுமையாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இந்த சம்பவத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். அது தொடர்பான பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.