CINEMA
அமெரிக்காவில் வெங்கட் பிரபு மற்றும் ‘தளபதி 68’ படக்குழுவினருடன் நடிகர் விஜய்… வெளியான புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் இருவரும் இணைந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. லியோ திரைப்படத்தில் அர்ஜுன், கௌதம் மேனன் மற்றும் திரிஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ஆக்சன் என்டர்டெயின்மென்ட் ஜெனரில் உருவாக உள்ள இந்த படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து தற்பொழுது தளபதி 68 திரைப்படத்துக்கான படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக படக்குழு தற்பொழுது அமெரிக்காகவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றுள்ளனர்.
அங்கு விஜய் ஏர்போர்ட்டில் இருக்கும் புகைப்படங்களும், புறப்படும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.