LATEST NEWS
இது தான் உண்மையான வளர்ச்சி.. தமிழ் சினிமாவை அசர வைக்கும் காமெடி நடிகர் யோகி பாபுவின் சொத்து மதிப்பு..!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் யோகி பாபு. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியுள்ளார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான யோகி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். அந்தப் படத்திற்கு பிறகு தான் பாபு என்ற தனது பெயரை யோகி பாபு என மாற்றிக்கொண்டார்.
திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மான் கராத்தே மற்றும் யாமிருக்க பயமே உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்து அசத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். குறிப்பாக காக்கா முட்டை என்ற திரைப்படம் தான் இவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் தனியாக பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகிவிட்டார். இந்நிலையில் ஒரு நாளைக்கு இவர் பல லட்சம் வரை சம்பளம் வாங்கி வரும் நிலையில் இவரின் மொத்த சொத்து மதிப்பு 40 கோடி வரை இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.