LATEST NEWS
இனிமே மொத்த லைக்ஸ் உங்களுக்கு தான்.. ஹாட் உடையில் ரசிகர்களை வசீகரிக்கும் நடிகை பிந்து மாதவி..!!

தமிழ் சினிமாவில் தனது கண்ணழகால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகை தான் பிந்து மாதவி. இவர் தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தவர்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலாக பொக்கிஷம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படத்தில் வரவேற்பு பெறாத நிலையில் அடுத்ததாக கழுகு திரைப்படத்தில் நடித்த இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, வெப்பம், சவாலே சமாளி,வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் பசங்க 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிக்பாஸில் தோன்றி ரசிகர்களை தன் வசம் கவர்ந்தார். அதேசமயம் தெலுங்கில் டைட்டில் வின்னர் ஆகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹோம்லி லுக் மற்றும் அழகான கண்கள் என ரசிகர்களை தனது கொள்ளை அழகால் கவர்ந்து வைத்துள்ளார். தற்போது கவர்ச்சியான உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.