தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் டெல்லி கணேஷ். இவர் ஆகஸ்ட் 1ஆம் தேதி 1994 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். பத்து வருடங்களாக விமானப்படையில் பணியாற்றியுள்ளார். 1976 ஆம் ஆண்டு கே பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

ஆரம்ப காலத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும் உலகநாயகன் கமலஹாசன் உடன் நடித்து வந்த இவர் நாயகன் திரைப்படத்தின் மூலமாக மக்கள் மனதில் இடம்பெற்றார்.

தமிழில் இவர் போக்கிரி ராஜா, காதல் கதை, ஆயிரம் விளக்கு, கருவறை, அவ்வை சண்முகி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1977-ல் இருந்து தற்போது வரை 400 திரைப்படத்திற்கு மேல் இவர் நடித்தார். இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்காக மெனக்கட்டு நடிக்கக்கூடிய ஒரு நடிகர்.

வில்லன், கதாநாயகன், காமெடியன், சீரியல் கேரக்டர் என எதுவாக இருந்தாலும் தனது முழு உழைப்பையும் தந்து நடிக்கக்கூடிய ஒருவர். இவர் நடிப்புத் துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனது.

இவருக்கு என திரைத்துறையில் தனி இடம் உள்ளது. இவர் முன்னணி நடிகர்களாக வளம் வரும் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிம்பு, சித்தார்த் என பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வசந்தம், கஸ்தூரி போன்ற சீரியல் அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து மழலை பட்டாலம் என்ற படத்தில் விஷ்ணுவர்தனுக்கு டப்பிங் செய்துள்ளார்.

45 நாட்கள் என்ற படத்தில் சிரஞ்சீவிக்கு டப்பிங் பேசியுள்ளார். நடிகர் டெல்லி கணேஷ் தனது அத்தை மகளை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு மகனும் உள்ளார். இவர் தற்போது பேரன், பேத்தி எடுத்து குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்து வருகிறார்.

இவரது மகன் மகாதேவன் விக்ரம் படத்தில் வில்லன் கூட்டத்தில் ஒருவராக நடித்திருப்பார். இவரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
