LATEST NEWS
40 வயசுலயும் திருமணம் செய்யாமல் இருக்க இது ஒன்னு தான் காரணம்… முதல்முறையாக மனம் திறந்த நடிகை கௌசல்யா..!!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை கௌசல்யா. விஜய், கார்த்தி மற்றும் பிரபுதேவா என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இவர் முதல் முதலில் தமிழ் சினிமாவில் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தின் மூலம் கௌசல்யா என்ற பெயரில் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் கவிதா என்ற தன்னுடைய பெயரை கௌசல்யா என்று அவர் மாற்றிக் கொண்டார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பலமொழி படங்களிலும் நடித்துள்ளார்.
கிட்டத்தட்ட 40 வயதை கடந்துள்ள இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றார். திருமணம் செய்து கொண்டு கணவன் மற்றும் குழந்தை என குறுகிய வட்டத்திற்குள் வாழ நினைக்கவில்லை எனவும் தற்போது சுதந்திரமாக வாழ்ந்து வருவதாக கௌசல்யா அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், திருமணம் செய்து வாழ்க்கை தொடங்கும் அளவுக்கு ஒரு சரியான நபரை நான் இதுவரை பார்க்கவில்லை. பின்பு எப்படி நான் திருமணம் செய்து கொள்ள முடியும்.
ஒருவேளை நான் எதிர்பார்க்கும் ஒரு நபரை சந்தித்து இருந்தால் நிச்சயம் திருமணம் பற்றி யோசித்து இருப்பேன். நான் சினிமாவில் இருந்து விலகிய போது நான் கிரிக்கெட் வீரரை காதலித்ததாகவும் அதன் பிறகு பிரேக் அப் ஆனதாகவும் செய்திகள் வெளியானது. நான் திருமணம் செய்யாததற்கு காரணம் அதிகமாக என்னுடைய பெற்றோரோடு இணைந்து வாழ்ந்து விட்டேன். நான் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது அதுபோல அவர்களைப் பிரிந்து என்னால் இருக்கவும் முடியாது இதுவும் ஒரு காரணமாக இருந்தது என கௌசல்யா கூறியுள்ளார்.