CINEMA
நா SINGLE-ஆ இருக்கேன்னு யார் சொன்னா…? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்…!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தற்போது ஹாலிவுட் பக்கமும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அட்லி தயாரிப்பில் உருவாகும் பேபி ஜான் படத்தின் மூலம் இந்தியில் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படம் இந்த வருடம் இறுதியில் வெளியாக உள்ளது.
இன்னைலியில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர், தனியாக இருக்கிறோம் என்று எப்பொழுதாவது வருத்தப்பட்டது உண்டா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ் , “நான் சிங்கிள் என்று யார் சொன்னார்? என்று கூறியுள்ளார். இந்த விஷயம் இணையத்தில் வைரலான நிலையில் கீர்த்தி சுரேஷ் காதலில் இருக்கிறாரா? ஆனால் அவருடைய காதலன் யார் என்று தெரியவில்லை? என்று இணையவாசிகள் பேசி வருகிறார்கள்.