CINEMA
அட குஷ்பூவுக்கு என்னாச்சு…? காலில் கட்டுடன் வெளியான போட்டோ…. ரசிகர்கள் ஷாக்…!!

தமிழ் சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்த நடிகை தான் குஷ்பூ. இவர் 1950 ஆம் வருடம் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதனை தொடர்ந்து 1990களில் முன்னணி ஹீரோயின் ஆக வலம் வந்தார். தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்தார். இதற்கிடையில் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள்.
இந்த நிலையில் சமூக வலைதளங்கள், சினிமா, தொலைக்காட்சி, அரசியல், குடும்பம் என்று பிஸியாக இருக்கும் நடிகை குஷ்பு தன்னுடைய காலில் கட்டோடு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இது குறித்து குஷ்பூ போட்ட பதிவில், நான் மற்றும் என்னுடைய பெஸ்டி மிக சிறந்த காம்போ என்று பதிவிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குஷ்புவின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகிறார்கள்.