GALLERY
ஹீரோயின் போல இருக்கும் 2 மகள்கள்.. தமிழ் சினிமாவை கலக்கிய 90’s நடிகை மதுபாலாவின் பலரும் பார்க்காத குடும்ப புகைப்படங்கள் இதோ..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மதுபாலா.
இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் மதுபாலா மோகன்லால், மம்முட்டி, ரிஷி கபூர், அர்ஜுன், பிரபுதேவா, மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இவர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அழகன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தில் மம்முட்டி, பானுப்ரியா நடித்திருந்தார். இதனையடுத்து வானமே எல்லை, ரோஜா, ஜென்டில்மேன், செந்தமிழ்ச்செல்வன் உள்பட பல தமிழ் திரைப்படங்களில் மதுபாலா நடித்துள்ளார்.
கடந்த 1999-ஆம் ஆண்டு மதுபாலா ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு அமயா, கெயா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
தற்போது நடிகை மதுபாலா தனது இரு மகள்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதனை பார்த்த ரசிகர்கள் இரண்டு மகள்களும் அப்படியே ஹீரோயின் போல இருக்காங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.