LATEST NEWS
உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறிய நடிகை பூர்ணா.. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பூர்ணா. கேரளாவை சேர்ந்த இவரின் நிஜ பெயர் ஷாம்னா காசிம்.
பின்னர் சினிமாவிற்காக பூர்ணா என்று மாற்றிக் கொண்டார். இவர் முதல் முதலாக நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தார்.
அதை தொடர்ந்து கொடைக்கானல் மற்றும் ஆடு புள்ளி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான தலைவி, திரிஷ்யம், அகண்டா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர் இறுதியாக தமிழில் தலைவி மற்றும் விசிதிரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் துபாய் தொழிலதிபர் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பூர்ணா தற்போது சேலையில் க்யூட்டான லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் குண்டாக ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.