LATEST NEWS
திருமணத்திற்கு முன்பு ரம்யா கிருஷ்ணன் அவருடன் லிவிங் டு கெதரில் இருந்தாரா?.. இதுவரை பலரும் அறியாத சீக்ரெட்..!!

தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். தென்னிந்திய நடிகைகளின் மிகவும் பிரபலமானவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பழமொழி படங்களிலும் கிட்டத்தட்ட 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.நடிகை சௌந்தர்யா நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான அம்மன் என்ற திரைப்படத்தில் அம்மனாக நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தவர். அதன் பிறகு பல சாமி திரைப்படங்களிலும் நடித்தார்.
அதுமட்டுமல்லாமல் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படத்தில் இவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது ரஜினியுடன் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த அசத்தி இருந்தார். இதனிடையே ரம்யா கிருஷ்ணன் பிசியான நடிகையாக வலம் வந்த நேரத்தில் இயக்குனர் கிருஷ்ணா வம்சியுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருவதாக தகவல் கசிந்தது.
இதனைத் தொடர்ந்து ரம்யா கிருஷ்ணருக்கு வேறு ஒரு நபரை திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்த நிலையில் ரம்யா கிருஷ்ணன் இயக்குனர். கிருஷ்ணா வம்சியை திருமணம் செய்து கொண்டார். இயக்குனர் கிருஷ்ணா வம்சி இயக்கிய சந்திரலேகா என்ற திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த நிலையில் படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் தற்போது இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.