LATEST NEWS
மயோசிடிஸ் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டார் நடிகை சமந்தா.. திரும்பி வர இத்தனை நாள் ஆகுமா..??

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. அவரின் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி வருகின்றன. அடுத்தடுத்த பிரச்சனைகள் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான போதிலும் தன்னுடைய மனதை வலிமையாக வைத்துக் கொண்டு சமந்தா வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு தெலுங்கு மற்றும் இந்தி என அடுத்தடுத்து மொழிகளில் பிஸியாக நடித்து ரசிகர்களின் கனவு கண்ணியாக திகழ்ந்துவரும் சமந்தாவிற்கு ஹிந்தியில் ஃபேமிலி மேன் 2 தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சிட்டாடல் இந்தியா தொடரில் நடித்துள்ளார். இதன் படபிடிப்பை முடித்த பிறகு சமந்தா தான் நடிப்பிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மயோசிடிஸ் நோய் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் இருந்து அமெரிக்காவிற்கு சமந்தா விமானத்தில் நேற்று புறப்பட்டுச் சென்றார். அங்கு நீயார்கில் உள்ள முன்னணி மருத்துவமனையில் சமந்தா சிகிச்சை பெற உள்ளார். இந்த சிகிச்சைக்காக பல மாதங்கள் சமந்த அமெரிக்காவில் தங்கி இருப்பார் எனவும் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினாலும் அடிக்கடி பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு வரவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சமந்தா விரைவில் குணமடைந்து திரையில் மீண்டும் ஜொலிக்க வேண்டும் என அவரை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.