LATEST NEWS
அந்த மாதிரி பேசிய ரசிகர்.. ஒத்த வார்த்தையில் பதிலடி கொடுத்த நடிகை ஷாலு சம்மு… அப்படி என்ன கேட்டார் தெரியுமா…??

தமிழ் சினிமாவில் பொன்ராம் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படம் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை ஷாலு சம்மு. தனது முதல் திரைப்படத்திலேயே நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனைத் தொடர்ந்து சகலகலா வல்லவன்,மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான இரண்டாம் கூத்து திரைப்படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்து அசத்தினார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக காத்திருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம் .
இந்நிலையில் ஷாலு சம்மு ரசிகர்களுடன் இணையத்தில் கலந்துரையாடினார். அரசியல் கேள்வி தவிர்த்து எந்த கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம் என்று அவர் கூறிய நிலையில் ரசிகர் ஒருவர் ஷாலு ஷம்முவின் தேகம் பற்றி ஆவேசமாக கேள்வி கேட்டார். அதனால் கோபமடைந்தால் ஷால்வ் சம்மு அந்த நபரை கண்டிக்கும் விதமாக பதிலடி கொடுத்த நிலையில் இவரின் துணிச்சலை பலரும் இணையத்தில் பாராட்டி வருகிறார்கள்.